Friday, 4 December 2009

சங்கிலியன் மன்னனின் அரண்மனை, நல்லூர்

மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறுடைய யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி சங்கிலி குமாரன் என்று அறியப்படும் எட்டாம் செகராசசேகரன் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களினால் 1619ஆம் ஆண்டு கொல்லப்பட்டதுடன் முற்றுப்பெற்றது. யாழ்ப்பாண இராச்சியத்தியன் சான்றுகளாக இப்பொழுது எஞ்சியிருப்பவை நல்லூர் - சங்கிலித்தோப்பு குறிச்சியில் எஞ்சியிருக்கும் அரண்மனை வாயிலும், மந்திரி மனையும், மன்னன் சங்கிலியனின் சிலையுமே. இவற்றில் அரண்மனை வாயிலும், மந்திரி மனையும் எந்தவித பராமரிப்புகளும் இன்றி அழிவடைந்து கொண்டிருக்கின்றன.

சங்கிலியன் மன்னனின் அரண்மனை வாயில்

மந்திரி மனை

2 comments:

  1. மேலுள்ள படங்களைச் ஆட்டையைப் போட்டு எனது பதிவொன்றிற்குப் பாவிக்கின்றேன்..மறுப்பிருந்தால் தெரிவியுங்கள்..நீக்கி விடுகின்றேன்.

    ReplyDelete
  2. உங்கள் கவலையே என்னதும். தொடரட்டும் உங்கள் பணி.
    எனது புகைப்படங்கள் பயன்படுத்தப்படுவதில் ஆட்சேபனை எதுவுமில்லை (மூலம் மறைக்கப்படாதவரை).

    ReplyDelete