Saturday 11 June 2011

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி - மூக்குத்திப்பூ

மூக்குத்திப்பூவினை பிடுங்கி அதன் காம்பினை பூவுடன் இணையுமிடத்தில் நுள்ளும்பொழுது பூ துள்ளி விழுந்தால் ஆணென்றும் அப்படியே சரிந்து விழுந்தால் பெண்ணென்றும் கூறுவதும், அதில் தேன்குடிக்க வரும் வகைவகையான வண்ணத்துப்பூசிகளைப் பிடித்து ஜாம் போத்தல்களில் விட்டுவைத்து அழகு பார்ப்பதும் (மாலையில் உயிருடன் இருந்தால் விடுதலை) என்று இயற்கையுடன் கொஞ்சிக்குலாவிய அந்தநாட்கள் மீளுமா?

மூக்குத்திப்பூ மேலே வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்து பேசுதம்மா

Thursday 9 June 2011

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி - வெடிக்காய் / வெடிபலவன்

எச்சில் தொட்டு அல்லது தண்ணீரில் போட்டு சிறிது நேரத்தில் வெடிக்கும் வெடிக்காய்கள் எனது சிறுபராய நாட்களின் விளையாட்டுப் பொருட்களில் ஒன்று. காணும் போதெல்லாம் பிடுங்கி வெற்று நெருப்பெட்டிகளில் (நெருப்புப்பெட்டிகளில்) சேகரித்து வைத்து வாளிக்குள்ளேயோ, தோட்டக் கிணற்றுக்குள்ளேயோ போட்டு டிக் டிக் என்று அவை வெடிப்பதை பார்த்து மகிழ்வதும், அதையே குறும்பாக மற்றவர்கள் தலைகளில் வைத்துவிட்டு நழுவிவிடுவதும் மறக்கமுடியாத இனிய நினைவுகள்.

வெடிக்காய் / வெடிபலவன்