Tuesday, 5 January 2010

வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம்

வீரசிங்கம் மண்டபம்

உலகம் 200 மாடிகளைக் கொண்ட பர்ஜ் கலிபா (பர்ஜ் துபாய்) கோபுரத்தைக் கண்டிருக்கும் இந்நேரத்தில் நான்கே மாடிகளைக் (ஐந்து தளங்கள்) கொண்ட வீரசிங்கம் மண்டபம் யாழ் நகரின் உயரமான கட்டடமாக விளங்குகின்றது. யாழ் நகரில் பொது நிகழ்வுகளுக்கு களம் அமைத்துக்கொடுப்பதற்காக யாழ் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் 1960 -களில் யாழின் கூட்டுறவுத்துறை ஆர்வலரும் முன்னாள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினருமான திருவாளர் வீரசிங்கத்தின் ஞாபகார்த்தமாக இந்தக்கட்டடம் எழுப்பப்பட்டது. யாழ் கோட்டை சுற்றாடலில் யுத்தத்தின் அகோரங்களுக்கு முகங்கொடுத்த வீரசிங்கம் மண்டபம் இன்றுவரை அசையாதிருப்பது அதிசயம்தான்.

பூகோளவியல் அமைவிடம்: 9° 39' 51.75" வடக்கு (அகலாங்கு), 80° 0' 37.99" கிழக்கு (நெட்டாங்கு)

Geographic coordinate: +9° 39' 51.75", +80° 0' 37.99" (9.664376,80.010552)

2 comments:

  1. உங்கள்தகவலுக்கு நன்றி. வீரசிங்கம் மண்டபத்தைவிடஉயரமான கட்டிடங்கள் இரண்டுஉள்ளன. இவை யாழ் பல்கலைக்கழக மாண்வர்விடுதிகளாகும். இங்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதிஇல்லை. அதன்உச்சியில் மொட்டை மாடிக்கு ஏறி பனைகளுக்கு மேலால் யாழ் நகரைப் பார்ப்பதில் தனிசுகம் உண்டு. யுத்த காலங்களில் கோட்டை நாவற்குளி காரைநகர் பகுதிகளில் இருந்து ஆமி ஷெல் அடிப்பதைக்கூட கண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. தவறை சுட்டிக்காட்டியதற்கும் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete