Thursday 9 June 2011

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி - வெடிக்காய் / வெடிபலவன்

எச்சில் தொட்டு அல்லது தண்ணீரில் போட்டு சிறிது நேரத்தில் வெடிக்கும் வெடிக்காய்கள் எனது சிறுபராய நாட்களின் விளையாட்டுப் பொருட்களில் ஒன்று. காணும் போதெல்லாம் பிடுங்கி வெற்று நெருப்பெட்டிகளில் (நெருப்புப்பெட்டிகளில்) சேகரித்து வைத்து வாளிக்குள்ளேயோ, தோட்டக் கிணற்றுக்குள்ளேயோ போட்டு டிக் டிக் என்று அவை வெடிப்பதை பார்த்து மகிழ்வதும், அதையே குறும்பாக மற்றவர்கள் தலைகளில் வைத்துவிட்டு நழுவிவிடுவதும் மறக்கமுடியாத இனிய நினைவுகள்.

வெடிக்காய் / வெடிபலவன்

6 comments:

  1. துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்தின் நினைவுகளை அள்ளி வருகிறது உங்கள் புகைப்படம்.

    ReplyDelete
  2. நன்றி ஐயா! இயற்கையுடன் விளையாடிய பள்ளிக்கால நினைவுகளை என்றும் மறக்க முடியாது.
    பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களுடனும் தொலைக்காட்சியுடனும் முடங்கிக் கிடக்கும் இன்றைய சிறுவர்களுக்கு இவற்றையெல்லாம் இரசிக்க முடிகிறதா அல்லது கொடுத்து-வைக்கவில்லை என்ற ஒரு ஏக்கம் என்னுள் உள்ளது.

    ReplyDelete
  3. உண்மைதான். எனது முகப்புத்தகத்தில் இதனைப் பகிர்ந்தபோது பலர் விரும்பியிருந்தது அதற்குச் சான்று.

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    பால்ய நினைவுகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா!

    ReplyDelete
  6. எனது புகைப்படம் பின்வரும் இணையப்பக்கத்தில் (எனது அனுமதி பெறாது) பிரசுரிக்கப்பட்டுள்ளது:

    http://aruthra.com/2012/08/15/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    ஒரு வார்த்தை கேட்டிருந்தால் நன்றாயிருக்குமே?

    ReplyDelete