வயதான காலத்திலும் சொந்தக் காலில் நிற்கின்ற எங்களூர் மக்களில் கச்சான் ஆச்சிகள் மறக்க முடியாதவர்கள். கோவிலுக்குப் போவதென்றால் கச்சான் வாங்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாய் இருந்தது / இருந்துகொண்டிருக்கிறது. அப்படியே பள்ளிக்கூட வாசல்களிலும் கச்சான், நாவற்பழம் என்று விற்ற ஆச்சிகளும் ஊர் வாழ்வின் மறக்க முடியாத சில அங்கங்களே.
Sunday, 9 May 2010
Subscribe to:
Post Comments (Atom)
நீங்கள் ஹாட்லியில் படித்த விஜயாலயனா? படமும் விடயமும் அருமை
ReplyDeleteமறக்கமுடியாத ஆச்சிமார்கள் தான்.கடலை அளக்கிற சுண்டு ஒரு மாதிரியாக இருக்கும் கவனித்திருக்கிறீர்களா?வெளியில் பார்த்தால் பெரிய போணி. உள்ளே பார்த்தால் அரைவாசி அளவாக இருக்கும்.
ReplyDeleteகீரிமலைக் கடற்கரையில் முழுகி விட்டு கடலையும் சோளன் பொரியும் மஞ்சள் கடலையும் வாங்கிச் சாப்பிட்டபடியே பயணிப்பது - அது ஒரு தனியான அனுபவம்.
அங்கு அவர்கள் பனங்கட்டிக் குட்டானும் விற்பார்கள். Home made!
பழைய நினைவுகளைத் தந்து போகிறது பதிவு.
ஓம் 'வந்தியத்தேவன்'. புனைபெயரில் எழுத நான் ஒன்றும் எழுத்தாளரில்லை.
ReplyDeleteமணிமேகலா! ஆச்சிமாரின் சுண்டுப் பேணி நடுவில் தட்டுப்போட்டு உண்மையான சுண்டு அளவின் பாதியையே முகந்தெடுக்கும். அதுக்கு ஈடு செய்யிறதுக்காகவே, பல ஆச்சிமாரிட்டை சாப்பிட்டுப்பார்த்து கடைசியா ஒருத்தரிட்டை மட்டும் காசுகொடுத்து வாங்குறதுதான் எங்கட பழக்கம். எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் சரியாகத்தானிருக்கும் ;-)