Saturday, 11 June 2011

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி - மூக்குத்திப்பூ

மூக்குத்திப்பூவினை பிடுங்கி அதன் காம்பினை பூவுடன் இணையுமிடத்தில் நுள்ளும்பொழுது பூ துள்ளி விழுந்தால் ஆணென்றும் அப்படியே சரிந்து விழுந்தால் பெண்ணென்றும் கூறுவதும், அதில் தேன்குடிக்க வரும் வகைவகையான வண்ணத்துப்பூசிகளைப் பிடித்து ஜாம் போத்தல்களில் விட்டுவைத்து அழகு பார்ப்பதும் (மாலையில் உயிருடன் இருந்தால் விடுதலை) என்று இயற்கையுடன் கொஞ்சிக்குலாவிய அந்தநாட்கள் மீளுமா?

மூக்குத்திப்பூ மேலே வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்து பேசுதம்மா

Thursday, 9 June 2011

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி - வெடிக்காய் / வெடிபலவன்

எச்சில் தொட்டு அல்லது தண்ணீரில் போட்டு சிறிது நேரத்தில் வெடிக்கும் வெடிக்காய்கள் எனது சிறுபராய நாட்களின் விளையாட்டுப் பொருட்களில் ஒன்று. காணும் போதெல்லாம் பிடுங்கி வெற்று நெருப்பெட்டிகளில் (நெருப்புப்பெட்டிகளில்) சேகரித்து வைத்து வாளிக்குள்ளேயோ, தோட்டக் கிணற்றுக்குள்ளேயோ போட்டு டிக் டிக் என்று அவை வெடிப்பதை பார்த்து மகிழ்வதும், அதையே குறும்பாக மற்றவர்கள் தலைகளில் வைத்துவிட்டு நழுவிவிடுவதும் மறக்கமுடியாத இனிய நினைவுகள்.

வெடிக்காய் / வெடிபலவன்

Thursday, 3 March 2011

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி - சில்வண்டு

இயற்கையுடன் விளையாடி வளர்ந்த நாட்களின் நினைவில் சில்வண்டின் ரீங்காரம் மறக்க முடியாததொன்று. இளவேனிற்கால மாலை நேரங்களில் துணையைக் கவர்ந்திழுக்க ஆண் சில்வண்டுகள் எழுப்பும் ரீங்காரம் கிராமங்களின் அமைதியைச் சீண்டிப்பார்க்கும். மரங்களின் நிறத்துடன் ஒன்றிப்போயிருப்பதாலும் அருகில் சென்றால் ரீங்காரத்தை நிறுத்திவிடுவதாலும் சில்வண்டுகள் எளிதில் புலப்படுவதில்லை.

சில்வண்டு

சில்வண்டு

Thursday, 3 February 2011

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி - தொட்டாற்சுருங்கி

தொட்டுத் தொட்டு தொட்டாற்சுருங்கி சுருங்குவதைப் பார்த்து மகிழ்ந்த அந்த நாட்கள்... முந்திக் கொண்டு போய் மற்றவர்களை விட முதலில் தொட்டுவிடுவதும், மற்றவர்களுக்குத் தெரியாத தொட்டாற்சுருங்கி வளர்ந்திருக்கும் இடங்களைத் தேடித்தேடி தொட்டவெளியெங்கும் அலைந்து திரிவதும் என்று கழிந்த அந்த இனிய மாலைப் பொழுதுகளின் நினைவில்...

தொட்டாற்சுருங்கி

தொட்டாற்சுருங்கிப் பூ

Sunday, 9 May 2010

கச்சான் ஆச்சிகள்

வயதான காலத்திலும் சொந்தக் காலில் நிற்கின்ற எங்களூர் மக்களில் கச்சான் ஆச்சிகள் மறக்க முடியாதவர்கள். கோவிலுக்குப் போவதென்றால் கச்சான் வாங்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாய் இருந்தது / இருந்துகொண்டிருக்கிறது. அப்படியே பள்ளிக்கூட வாசல்களிலும் கச்சான், நாவற்பழம் என்று விற்ற ஆச்சிகளும் ஊர் வாழ்வின் மறக்க முடியாத சில அங்கங்களே.

கச்சான் ஆச்சிகள்

Saturday, 8 May 2010

எமது மூதாதையர்களின் கருவிகள்

எமது மூதாதையர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய சில பொருட்கள்:

பாக்குவெட்டி

வெற்றிலைப்பெட்டி (வெளித்தோற்றம்)

வெற்றிலைப்பெட்டி (உட்புறத்தோற்றம்)

இடியப்பம் பிழியும் கருவி